search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி பண்டிகை"

    • பழைய பேப்பர் குடோன் பட்டாசு தீப்பொறியினால் எரிந்து நாசமானது.
    • ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    திருச்சி:

    தீபாவளி திருநாள் நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டது. திருச்சியில் தீபாவளி தினமான நேற்று முழுவதும் பட்டாசு வெடிக்கும் ஓசை எதிரொலித்து கொண்டே இருந்தது.

    தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினர், சத்திரம் பேருந்து நிலையம், காஜாபேட்டை ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் பட்டாசு வெடித்ததன் காரணமாக திருச்சியில் ஆங்காங்கே தீ விபத்துக்கள் ஏற்பட்டது. ராக்கெட் பட்டாசு விட்டதினால் ராஜாகாலனி, கே.கே.நகர், அம்மையப்ப நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பந்தல் போட வைத்திருந்த கீற்றுகள் பட்டாசு பொறி பட்டு தீப்பிடித்து எரிந்தது. சோழராஜபுரம் பகுதியில் வீட்டின் முன்புறம் போடப்பட்டிருந்த கீற்று கொட்டகை பட்டாசு தீப்பொறி பட்டு எரிந்து நாசமானது. கீழ தேவதானபுரத்தில் பழைய பேப்பர் குடோன் பட்டாசு தீப்பொறியினால் எரிந்து நாசமானது. மேலும் பழைய பால்பண்ணை மகாலட்சுமி நகர் பகுதியில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

    இதேபோல ஸ்ரீரங்கம் பகுதியில் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், கீதாபுரம் ஆகிய பகுதிகளில் ராக்கெட் பட்டாசு காரணமாக 3 இடங்களில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் ராவேந்திரா அபார் மெண்டில் பால்கனியில் வைத்திருந்த துணிகள் பட்டாசு தீப்பொறியின் காரணமாக எரிந்தது. இதனை ஸ்ரீரங்கம் தீய ணைப்பு துறையினர் அணைத்தனர்.

    • சென்னையின் முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
    • போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் சாலைகள் கூட வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி பலர் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்ததால், சென்னையின் முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    சென்னையில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

    இதனால் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் சாலைகள் கூட வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    இதேபோன்று தீபாவளி பண்டிகையையொட்டி வெறிச்சோடி சென்னை விமான நிலையம் காணப்பட்டது. போதிய பயணிகள் இல்லாததால் டெல்லி, புனே, கொழும்பு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதைதொடர்ந்து மேலும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

    • பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • பொதுமக்களுக்கு விஜயகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடினார்.

    தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விஜயகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

    • தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து கூறினார்.

    ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.

    மோகனா லஷ்மி என்ற சிறுமி நடிகர் ரஜினிகாந்த்தை பார்க்க பல தடவை வந்ததாகவும் ஆனால் இன்று தான் தன்னால் பார்க்க முடிந்தது என்று கண்கலங்கினார்.

    • பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து கூறினார்.

    ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.

    • தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • 30 தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து மதத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கருதப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பட்டாசு கழிவுகளை கொண்டு செல்ல மண்டலத்துக்கு 2 வாகனங்கள் என 30 தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பட்டாசு கழிவுகளை பொதுமக்கள் தனியாக கொடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

    • நாடு முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்படுகிறது.
    • போக்குவரத்து கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் அனுமதியின்றி பிடித்தம்.

    தீபாவளிக்கு அரசு ஊழியர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிட்டோர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது.

    நாடு முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்படுகிறது.


    இந்நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் அனுமதியின்றி பிடித்தம் செய்யப்படுவதால் தொழிலாளர்கள் பண்டிகைக்காக கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    அதனால் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் அனுமதியின்றி பிடித்தம் செய்ய தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வாதங்களை கேட்ட உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக தமிழக அரசு, போக்குவரத்து கழகங்கள் 2 வாரங்களில் பதிலளிக்க அளிக்க உத்தரவிட்டது.

    • பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்.
    • பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது.

    "போனஸ்" என்றால் என்ன..?

    இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது...! (வருடத்திற்கு 52 வாரங்கள்)

    ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல்படுத்தினார்கள். 4 வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்..!(12×4=48 வாரங்கள்) அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4 வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.

    இந்தியர்னா சும்மாவா?

    அதனை தரும்படி 1930-1940 களில் மகாராஷ்டிராவில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப்படுவதாக போராடினார்கள்.

    அதன் விளைவாக அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்..!

    அப்போது தான், தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது..! பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது.

    -நளன்

    • மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
    • நாகர்கோவில் நகரில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    நாகர்கோவில், நவ.11-

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படு கிறது. இதையடுத்து புத்தா டைகள் எடுப்பதற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான பொதுமக்கள் நாகர்கோவிலில் உள்ள கடை வீதிகளில் குவிந்திருந்தனர்.

    இதனால் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் கூட்டம் இன்று காலை முதலே அலைமோதியது. மீனாட்சிபுரம் கலெக்டர் அலுவலகம், வடசேரி, செட்டிகுளம் உள்பட நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளிலும் இன்று கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் குடும்பத் தோடு வந்து புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர். நாகர்கோவில் நகரில் கூட்டம் அலைமோதியதை யடுத்து நாகர்கோவில் நகரில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    வடசேரி, வேப்பமூடு, செட்டிகுளம் பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடு பட்டனர். ஜவுளி கடைகளில் மட்டுமின்றி பட்டாசு கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளி பண்டிகையை யொட்டி விற்பனைக்கு வந்திருந்த விதவிதமான பட்டாசுகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். பேக்கரிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலை யங்களிலும் கூட்டம் அதிக மாக இருந்தது. இதையடுத்து கடை வீதிகளிலும் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலை பயன்ப டுத்தி கொள்ளையர்கள் கை வரிசை காட்டக்கூடும் என்ப தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கு மாறு போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தினார்கள்.

    கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், குழித்துறை, பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ஆங்காங்கே வாகன சோதனையும் நடத்தப் பட்டது. ஹெல்மெட் அணி யாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். வடசேரி பஸ் நிலையத்தில் இன்று காலையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தீபாவளி பண்டிகையை யொட்டி வெளியூர்களி லிருந்து சொந்த ஊருக்கு பஸ்களில் வந்த பொது மக்கள் அதிகமானோர் அதிகாலையில் பஸ்களை விட்டு இறங்கி சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதனால் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இதேபோல் வெளியூர்களில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    • சுற்றுலா தலங்கள் களை கட்டியது
    • கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி :

    தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக இன்று காலை முதல் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.

    கடந்த 3 நாட்களாக மழைமேகம் காரணமாக தெரியாமல் இருந்த சூரியன் உதயமாகும் காட்சி 3 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.

    அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்துநின்று படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.

    133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் திருவள்ளுவர் சிலையை படகில் பயணம் செய்யும் போதும் கடற்கரையில் நின்ற படியும் சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, மருந்துவாழ் மலை, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. வட்டக்கோட்டைக்கும் உல்லாச படகு சவாரி இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • வனப்பகுதி அருகே அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால், பறவைகள், வனவிலங்குகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.
    • வன எல்லையை ஒட்டியுள்ள கிராம பகுதிகள், தனியார் விடுதிகளுக்கும் துண்டு பிரசுரம் வினியோகித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது

    உடுமலை:

    நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, மக்கள் பலரும், புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்புகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய கிராமங்கள், செட்டில்மெண்ட் பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும், பல்வேறு விதிமுறை வகுத்து பசுமை தீபாவளி கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:-

    வனப்பகுதி அருகே அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால், பறவைகள், வனவிலங்குகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.குறிப்பாக அரியவகை பறவைகள், தனது வாழ்விடங்களை விட்டு மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளை தேடி சென்று விடும் அபாயம் உள்ளது. எனவே, வனம் ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்கள், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. முடிந்த வரை பட்டாசு இன்றி பசுமை தீபாவளியை கொண்டாட கிராம மக்கள் முன்வர வேண்டும். வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள், பட்டாசு வெடிப்பதில்லை. இருப்பினும், அந்தந்த செட்டில்மெண்ட் பகுதிகளிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதேபோல வன எல்லையை ஒட்டியுள்ள கிராம பகுதிகள், தனியார் விடுதிகளுக்கும் துண்டு பிரசுரம் வினியோகித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தீபாவளி கொண்டாட்டத்துக்கு வருவோரை வனத்துக்குள் அத்துமீறி அழைத்து செல்வதையும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, வனக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபடுவர். விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால் பலரும் பட்டாசு வாங்கி வருகின்றனர்.
    • திருவள்ளூர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட சில இடங்களில் நடந்த சோதனையில் 4 பேர் பிடிபட்டனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை கொண்டாட்ட உற்சாகத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் பட்டாசு பஸ், ரெயில்களில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    எளிதில் தீ பற்றக்கூடிய இவற்றை பயணத்தின் போது கொண்டு சென்றால் ரூ.1000 அபராதம். அதனை கட்ட தவறினால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட விதி உள்ளது.

    தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால் பலரும் பட்டாசு வாங்கி வருகின்றனர். இதனால் மின்சார ரெயில்களில் அதிரடி சோதனை நேற்று முதல் தொடங்கியுள்ளது.

    சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், தண்டையார்பேட்டை, பேசின்பாலம், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட சில இடங்களில் நடந்த சோதனையில் 4 பேர் பிடிபட்டனர்.

    திருத்தணி புறப்பட்டு சென்ற மின்சார ரெயிலில் புளியமங்கலம் ரெயில் நிலையத்தில் நடத்திய சோதனையில் கொரட்டூரில் ரூ.15 ஆயிரத்துக்கு பட்டாசு வாங்கி வந்ததாக தெரிவித்த பிரதாப் குமார் (24), ஹரி பிரசாத் (18) ஆகியோரை போலீசார் கைது செய்து ரூ.1000 அபராதம் விதித்தனர். அதே போல் மூர்மார்க்கெட் நிலைய பிளாட்பாரத்தில் சோதனை செய்த போது தண்டபாணி (39) என்பவர் பிடிபட்டார். அயப்பாக்கத்தை சேர்ந்த ராமமூர்த்தி (38) என்பவர் ரூ.5 ஆயிரத்து 500 மதிப்புள்ள பட்டாசு பெட்டிகளை கொண்டு வந்த போது சிக்கினார். இருவருக்கும் ரெயில்வே போலீஸ் சட்ட விதிகளின்படி ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. ரெயில்வே கோர்ட்டில் ஆஜராகி பின்னர் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்றும் நாளையும் ரெயில்களில் பட்டாசு சோதனை நடைபெறுகிறது. பொதுமக்கள் பட்டாசுகளை ரெயில்களில் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.

    ×